Friday, April 29, 2011

மனிதனா மகானா

எங்கு நோக்கினும் பரிதவிப்புகள் எங்கும் துயரம்
எந்த பக்கம் பார்த்தாலும்
ஆழ்ந்த துக்கமும்,அளவில்லாத துயரமும்
மாமனின் மடலிலும்,சிறிய தந்தைன் சிற்றோலைலும்
கண்டேன் வேதனைன் ஓலத்தை,
உலகமே ஆர்பரிக்கும் ஆதங்கத்தில்
என் சொந்த சோகமும் வெளிப்பட்டு விடுமோ என்ற ஐயம்
ஐயம் எதனால்
மனிதனா மகானா என்ற தொடங்கிய நிலைக்கே செல்வோம்
தனி மனித துயரம் ,தன் மனைக்கும்,தன் மனிதருக்கும்
பிந்தையது __உலகினுடியாது,
இன்னும் முந்தைய நிலைக்கு செல்வோம்
கை கால்களை உதைத்து அடம் பிடிக்கும் குழந்தைன் நிலையில் மனிதன்........
எத்தனை மகான்கள் பிறவிப் பயனையும், பிறவிகடனையும்
தெள்ளதெளிவாக அறுதியிட்டு காண்பித்தாலும்
ஒரு ராமனும்,ஒரு கிருஷ்ணனும்,ஒரு ராமகிரிஷ்ணனும்
ஒரு ரமணரும் ஒரு சாயிய் மகானும்
பிறவி பெருங்கடலில் உரைத்து உணர்தியது
பிரிவும் பெருந்துயரும் சரஈரதிர்கேயன்றி
ஆன்மாவுக்கல்ல ,,,
அவர்தம் அடைந்த சரிரதுன்பம் அனைத்து உயிர்களும் (மகானையும் விட்டு வைபதில்லை இந்த சரிர துன்பம்)
உணரவேண்டிய பிறவி பெருவினை,
மனித குழந்தைக்கு புரிகிறது தெரிகிறது,
என்ன பயன் __
அடம் பிடிக்கும் குழந்தை அடம் பிடிகிறது (அடம்_ எல்லாம் தெரிந்துகொண்டே கிடைக்காது என்றாலும் தனக்குத்தான் எல்லாம் வேண்டும் என்ற நிலை)

நான், எனது,என்னுடையது என்று ___
ஆன்மாவையும் தனுடியாதக்கி,
ஆன்மாவோ ____விட்டு பறக்றது வந்த வேலை முடிந்ததென்று,,,,
என்றும் அன்புடன்
சுபாரமேஷ்

Wednesday, April 27, 2011

சாய் அம்மா

சமீப மாதங்களின் கடைசியில்
தொடரும் துயர நிகழ்சிகள், அப்பப்பா

அடி மேல் அடியாக தாங்க முடியவில்லை
துயரங்களின் சிகரமாக இடியாய் வந்தது

நமது அன்பு பாபாவின் பூத வுடல் துறவு
பகவன் எங்கும் இருப்பார் துயர் வேண்டாம்

அது எங்களுக்கு புரியாது ஏனென்றால்

நங்கள் சாய் அம்மாவின் குழந்தைகள்

குழந்தைக்கு அம்மா வேண்டும் பார்த்து ரசிக்க

சரீரம் எடுத்து கை கொடுத்து அன்பு மழை பெய்ய

ஏங்கி தவிக்கிறோம் அம்மாவை இனி எங்கு காண்போம் என

இனி மனிதா யார் நீ ஆராய்ச்சிக்கு வருவோம்

சத்தமாய் சொல்லுகிறேன் உங்களுக்கு கேட்கிறதா

ஆடம்பர செயல்கள் மனிதனின் ஆணவத்தின் பிரதிபலிப்பு

அந்தரங்க சுத்தி மனிதனை மனிதானாக மாற்றும் எதிர்பார்ப்பு

இதுவே பிறவி பயனை அடைய வழி நோக்கு




என்றும் அன்புடன்
தங்கள் குடும்ப நபர்களில் ஒன்றாக

மனிதா யார் நீ? தொடர் பகுதி-6

மனிதா யார் நீ? தொடர் பகுதி-6
சென்ற வாரம், சொன்னதை நினைத்துப்பாருங்கள். அவன் எங்கும் நிறைந்தவன் என்றோம்...
ஆனால் இன்று,
இடி போன்று இறங்கியது
நம் இதயம் வாழ் சாயியின் துயில்.
துடித்துப்போனது நெஞ்சம், இனி
துயர் துடைக்கப்போவோம் எங்கே,
படித்துச்சொன்னது மனம், இறைவன்
பரம்பொருள், ஜ்யோதி ஸ்வரூபன்;
எங்கும் நிறைந்தவன்!
எல்லாமுமாய் எம்முடன் இருப்பான் சாயிநாதன்!
பதினான்கில் பாபா பரந்தாமன்,
இன்று, எங்கெங்கிலும் நிறைத்த பராபரன்....... ..
அடி ஐந்து.
சரீரம் எடுத்தது சாதனைக்கே
மனம் அடக்க இரு வழி உண்டு,பலர் அறிய செய்யும் செயல்கள்;
பகிரங்கம் - அது யாகம், பூஜை, விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடங்கள்..
தான் அறிய மட்டும் செயல்கள்;
அந்தரங்கம் - தியானம், உதவிகள், த்யாகங்கள்.
பகிரங்க செயல்களுக்கு தேவை - பொருள், பகட்டு, ஆடம்பரம்
அந்தரங்க செயல்களுக்கு தேவை - அகிம்சை, சத்தியம்,தூய்மை, புலனடக்கம், திருடாமை.
இவை சாமான்ய தர்மங்கள்,
உன்னை நீ புரிந்து கொள், ஒழுக்கம் கொண்டோனை உலகம்
இருந்தாலும் மதிக்கும்,
இறந்தாலும் மதிக்கும்.
மனிதனாய் வாழ அறிந்தால்,
சரிரம் எடுத்தது சாதனையாகும்...
இனி நீங்கள் செய்யும் செயல்கள்,
பகிரங்கமா? அந்தரங்கமா?
ம் ம் .. சத்தமாய் சொல்லுங்கள், கேட்கவில்லை..

Tuesday, April 26, 2011

கவிதை வெள்ளம பெருகுகிறது சுனாமியாய்
தாங்க முடியவில்லை தலை குனிந்தேன்
இவ்வளவு கவிதை உள்ளம்மா என ஆச்சிரியமாக
வாலிக்கும் வைர முத்துக்கும் போட்டியாக
சபாஷ் சரியான போட்டி என ரசிக்கும்படியாக
தமிழ் இதழ்களில் வெளிவருமா என ஆவலாக

கவிதை மலையை எட்டி பார்கிறேன் முடியுமா என
சீ சீ இந்த பழம் புளிக்கும் என விலகிவிட்டேன்
முடியாதா ஆதங்கத்துடன் அயர்து நின்றேன்

கவிதை நடை மிக அருமை
சொல்லும் கருத்து அதை விட அருமை
திரும்பி திரும்பி படித்து படித்து
கருத்தரங்கு மன்றம் நடத்தி நடத்தி
என் நண்பர் சாலமன் பாப்பையாவை நாடி
ஆராய்வேன் முடிந்தால் அதன் சாராம்சத்தை

தொடரட்டும் தங்கள் கவிதை வெள்ளம்
சவாலுக்கு சவாலாக மும்பையுடன்

என்றும் அன்புடன்

அத்திம்பேர்
வாழ்வின் கதையரியா விழைந்து காத்திருந்தேன்
விடையுன்று கிடைத்தது,
உன் வழிப் பாதை புலப்பட்டது.
சரிஎது,தவேறேது, நேற்றேது,நாளிது,
தரம் பிரிப்பது தனி மனிதனின் மனமே
உன் வழி,உன்பாதை,உன் உறவு,உன் மனம்,-ஏதாகிலும்
நீ உரைத்தஉறவுகள் உன் பின்னே நிக்கும்.
ஒவ்வுறு வீட்டிலும் நீ காணலாம் ஓரிரண்டு
மகானை(காந்தி மகானை)
குழந்தை அடி பயில
ஆகும் நேரம் என்று அறிவேன்-ஆதல்லல் அயர்தேன் சற்று
குழந்தை வைத்துவிட்டது மூன்று அடிகளை.
ஓடிவந்தேன் கை பிடிக்க,குழந்தை பார்த்து சிரித்தது,
மக்ழிந்து பார்த்தேன்
கண்களில் கவலை.
குழந்தை கண்களில் கவலைய?கவலை கொண்டேன்.
மனித நேயத்தை பற்றிய கவலை என்றதும்
,விண்ணையும்,மண்ணையும் ஈரடி ஆலன்தது
குழந்தையன்றி யார்?
அதுவே பார்த்துக்கொள்ளும் என்ற நிம்மதியுடன்
அடுத்த அடிக்காக காத்திருக்கிறேன்
இப்படிக்கு
சுபாரமேஷ்

மனிதா யார் நீ? தொடர் பகுதி-4 - ஒரு பார்வை

மனிதா யார் நீ? தொடர் பகுதி-4 - ஒரு பார்வை

மனிதன் பிறக்கும்போது மனிதனாகத்தான் பிறந்தான்
அவன் பிறகு மனிதனா மிருகமா என்பது
அவனது வாழ்க்கை முறையிலே
அவனது வளர்ப்பு முறையிலே
அவனது எண்ணங்கள் செயலிலே

எல்லாம் நன்றாக தான் அமைந்தது
ஆனால் எதையோ தேடுகிறோம்
எதை தொலைத்து விட்டோம் என்று
அந்த மனித நேயத்தை தேடி தேடி

கவிதை மிக அருமை மேலும் மேலும் மெருகுடன்
கவிதை இலக்கணம் மேலும் மேலும் நயத்துடன்
இனி தேவை எங்களுக்கு தமிழ் அகராதி
பொழிப்புரை வேண்டுமென அலச
கொஞ்சம் வாலி நடை இருந்தால்
உணர்வோம் மேலும் சிறப்பாக

தொடரட்டும் தங்கள் 'மனிதா யார் நீ' தேடுதல் வேட்கை
தேடுவோம் நாங்கள் தினம் தினம் தங்கள் கவிதை தனை

என்றும் அன்புடன்

கே சுந்தரேசன்

Wednesday, April 20, 2011

கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும்
அனால் நாகராஜர் வீட்டு புல்லும் கவி பாடும்
அதுவும் நீ இரு நாகரஜரின் அன்பு வாரிசு

புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா
அங்கு அன்னை கவிதை மழை சாரலாக
இங்கு சேய் மடை திறந்த வெள்ளம் போல
மும்பையர் யோசிக்கிறார் தான் எங்கு இருக்கிறோம் என்று

இமயமலை போல உறங்கி கொண்டிருந்த
உன் கவிதை வேட்கை இன்று பரிதி கண்ட பனி போல்
கரை புரண்டு ஓட ஆரம்பித்து விட்டது கங்கை வெள்ளமாக
தட்டி எழுப்பிவிடு உன் கவிதை நேயத்தை
பரப்பி விடு உலகெல்லாம் உவகை கொள்ள

இப்போது தான் தெரிகிறது இரண்டு ஸ்ரீயும் நவீனில்
கவிதை மன்றம் நடத்துவதர்காகவோ
தொடரட்டும் தங்கள் கவிதை பட்டி மன்றம்
இருக்கிறோம் நாங்கள் ரசிக்க ஆவலாக

என்றும் அன்புடன்

சித்தப்பா

ஜெயஸ்ரீ Maiden

அன்பிற்கினிய சிற்றப்ப அவர்களே
கலிபோர்னிய சென்றாலே கவியாகி விடுவரோ
கவனமுடன் நானும் கற்றுத்தான் பார்க்கிறேன்
கனியவில்லை கலையும்
எழத்து கூட்டி எழுதி பார்க்கிறேன்
என் புத்திக்கு எட்டவில்லை எதுவும்
படித்துதான் பார்க்கிறேன்
பணியவில்லை சிறிதும்
உழைத்துதான் பார்க்கிறேன்
உரைக்கவில்லை ஒன்றும்
அப்பப்பா ஆளை விடுங்கள்
அலுத்துப் போனேன் நானும்
ஆசையை தீர்த்துக் கொள்கிறேன்
அழகாய் படித்துப் பார்த்தே !!!!!!!!!!!!!
அன்புடன்
ஜெயஸ்ரீ
(பிழைகள் பொறுக்க வேண்டுகிறேன் )

மனிதா யார் நீ? தொடர் பகுதி-5

மனிதா யார் நீ? தொடர் பகுதி-5
மனிதன் - அவன் என்ன ஆண்டவனா?
கடவுளே மனிதனாக அவதரித்த போது
மனிதன் ஏன் ஆண்டவனாக முடியாது?
நீங்கள் சொல்லுங்கள் காஞ்சியிலே அவதரித்த மகான், காஞ்சி முனி மண்ணில் உதித்த மனிதனா அல்ல கடவுளே அனுபிவைத்த தெய்வ மகானா?
ஒன்று மட்டும் நிச்சயம், கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் காத தூரம் இல்லை,
கன தூரம்தான்...
அது சரி
அடி நான்கு
அன்பென்ற சொல்லுக்கு உடையன அனைத்துயிரும்
பண்பென்ற சொல்லுக்கு படைத்தனன் மனிதனை
என்னென்று சொல்வேன் பண்பைதேடி
பரிதவிக்கும் இம்மக்களை.
உண்டென்று உணர்தால் - அவன் உண்டு
இல்லையென்று மறுத்தாலும் - அவன் உண்டு
அன்புக்கும் - அவன் உண்டு
பண்பிற்கும் - அவன் உண்டு
ஆசானாய் - அவன் உண்டு
நண்பனாய் - அவன் உண்டு
அன்னை, தந்தையாய் - அவன் உண்டு
குழந்தயாய் - அவன் உண்டு
இயலாமைக்கு - மருந்தாய் அவன் உண்டு
இருளுக்கு - விளக்காய் அவன் உண்டு
வெயிலுக்கு - நிழலாய் அவன் உண்டு
மழைக்கு - குடையாய் அவன் உண்டு
எல்லாமுமாய் - அவன் உண்டு
எல்லாமுமாய் எம்முடன் இருக்கும் இறைவன் என்ன சொன்னார்..
நன்றாய் யோசி, நீ யாராக இருக்கிறாய்,
இது உன் உடலா? இது உன் பெயரா? நீ அறிவாளியாய் அறியபடுகிறாயா?
நீ மனிதனா? நீ மிருகமா? நீ கடவுளா?
உண்மையில் நீயே ஆத்மா.
அதுவே நீ மனிதனாக, நீயாக,
அறிவாளியாக, எல்லாம் உடையவனாக
இந்த பெயருடையவனாக அறியபடுகிறாய்.
உண்மையை அறிந்துகொள்,
அறிந்துகொண்டதும், அதை முழுமையாய், பிடித்துக்கொள், ...
மனதுக்குள் பல இச்சை கொண்டு,
வாழ்வின் அர்த்தத்தை தொலைத்துவிடாதே...
அறிவாய் நீ யாரென்று....

--
N. Bhaskaran
+919820807258

Tuesday, April 19, 2011

நாகராஜன் பிறந்த நாள்

தலைநாயர் என்றாலே தனி பெருமை
பெரிய மாடி வீடு என்றால் தனி சிறப்பு
அந்த ஆலமர கிளையாக நமது
சிறப்பு விருந்தினர் நாகராஜன்
இன்று ஏப்ரல் 20 பிறந்த நாள் காணும் அரசர
பாரியின் சிறந்த வாரிசு

வெள்ளை வெளேர் என வேஷ்டி அவரது சிறந்த மனது போல
மடிப்பு கலையாத சட்டை அவரது தெளிவான எண்ணம போல
இது தான் அவரது அலங்காரம், அடையாளம்

அவரது வாழ்கை ஒரு வரலாறான புத்தகம்
சவால்களை சமாளித்த ஒரு மாபெரும் காவியம்
குழந்தைகளை கரை ஏற்றின ஒரு உணர்வான பெருமிதம்

அவர் என்றும் நிம்மதியுடனும், ஆரோக்கியத்துடனும்
மகிழ்ச்சியுடனும், குடும்பத்துடனும் சிறப்பாக வாழ
சதாபிசேகம் சிறப்புடன் கொண்டாட
எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறோம்

அவருக்கு எங்கள் யாவருடைய மனம் கனிந்த
பிறந்த நாள் வாழ்த்துகள்

என்றும் அன்புடன்

தங்கள் CA and NJ கிளை குடும்ப நபர்கள்

Wednesday, April 13, 2011

மனிதா யார் நீ? தொடர் பகுதி-4

மனிதா யார் நீ? தொடர் பகுதி-4
கண்டோம், கேட்டோம், கற்றோம் வாழ்வின் கதை என்ன...
விழி வைத்து காத்திருந்து வீணாகவில்லை
வாழ்வின் விதை எங்கே முளைத்து வந்ததோ
என்ற விடை காணும் முயற்சி,
பழி ஒன்றும் செய்யாமல் பாவம்தனை சுமக்காமல்
மனிதனாய் வாழ மாதவம் செய்தேனோ
என் முன்னோர் வழி வகுத்த பாதையில் நான்
நடக்க முனைபேனோ....
சரி ஏது, தவறேது, தரம் பிரிக்க தந்தனரே
அறிவென்ற முதல் படி அதுதானே மனிதனுக்கு
அரிச்சுவடி...
மற்றோர் நலம் கருதி வாழ்வதென்பதே மாநிடமோ,
பற்றேதும் இல்லா மனிதன் பவனியில் உண்டோ; ஆனால்
சற்றே நிலை கொண்டால் நாமும் காந்தி மகான் தான்...
அடி மூன்று
அறிந்தோம் அடி ஒன்றில்; கற்பனை உலகில் பவனி வந்தோம், தேடி
திரிந்தோம் மூலத்தை, மனிதனில் மறுமுகம் கண்டோம் அடி இரண்டில்.
அடி மூன்றில் உள்நோக்குவோம் உண்மையில் உள்ளது என்ன?
உறவுகள் வந்தது ஏன்?
இறைவன் கொடுத்தது உடன் பிறப்பு
முயன்று கிடைத்தது உயிர் நட்பு
இதயம் இணைத்தது இல்லற பிணைப்பு; வாழ்வின்
அர்த்தங்கள் வசந்தமாய் வந்தது நம் வளர்ப்பு..
இவை யாவும் மனிதனிக்கே உடைத்தது
அவை அமைவது அப்பருவதினில் கிடைப்பது
வாழ்கையின் அர்த்தங்கள்; காலத்தின் நிகழ்வுகள்; வாழத்தெரிந்திருந்தால்
அத்துணையும் வளங்கள்..
நினைத்துப்பாருங்கள்,
வளர்ப்பு சரியாய் தானே இருந்தது,
மனம் மலராய் தானே மணந்தது,
உறவுகள் உயர்வாய் தானே திகழ்ந்தது,
கல்வி, கலைகள் கற்றுதானே நாம் உயர்ந்தது,
பின் ஏதோ நீ மறந்தது?
ம்ம்..... ம்ம்..... இதுவரை எல்லாம் சரிதான்,
எங்கே தொலைந்தது மனிதா.. நேயம்..
மனிதனுக்கான அடையாளம்...
நான் தேடுகிறேன், நீங்க......................
தேடிக்கொண்டே இருங்க, வரேன்...................

தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் 2011

தமிழ் புத்தாண்டு பிறந்து விட்டது புது புரட்சியுடன்
புது புது நல்ல மாற்றமாக பலரின் எதிர் பார்ப்புடன்

பழைய கல கல என்ற வாழ்க்கைக்கு மாறுவர் சிலர் வுடல் நலம் கண்டு
பழையன மறந்து சிலர் புது உத்வேகம் கொள்வார் இது தான் வாழ்க்கை என புது வாழ்வை தேடி
பாசமா தாய் நாட என சிலர் அங்கும் இங்குமாக நடை போட்டுகொண்டு
ஆசிய நமது வீடு என சிலர் சுற்றி வருவார் தம் மக்களை நாடி

சிலர் புது குழந்தைதனை பேரனா அல்லது பேத்தியா
எல்லாம் சம்மதம் என கையில் ஏந்துவார் மகிழ்ச்சியுடன்
தாயும் சேயும் உடல் நலமாக கடவுளை வேண்டி

இது நமது வீடு என உணர்வுடன் சிலர் புது மனை புகுவார் மன நிறைவுடன்
வேலை போதுமென ஒய்வு பெறுவார் சிலர் தானாகவே மன நிம்மதியை தேடி
வேலை வேண்டாம் என ஒய்வு பெறுவார் சிலர் தானாகவே உடல் நலம் நாடி
ஆசிரமா அல்லது ஒய்வு விடுதியா என இடம் மாறுவார் தென்னகம் நோக்கி

வேலையில் சிறப்பு, மென் மேலும் உயர்வு என அமையும் சிலருக்கு
மண வாழ்க்கை சிலருக்கு அமையும் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட
வேலை நிமித்தம் சிலர் செல்வார் பல நாடுகளை கடந்து வெற்றியுடன்
பறந்து செல்வர் சிலர் மேற்படிப்பு படித்து வெற்றி வாகை சூட
புது இடம் காண்பார் கல்லூரியில் காலடி வைத்து வெற்றி பெற

கர வருடம் எல்லோருக்கும் அமையும் அவரவர் விருப்ப படி இனிதாக
இது ஜோசியம் அல்ல, மன நிறைவுடன் வெளி வரும் எங்களது வாழ்த்துக்கள்
வேண்டுகிறோம் கடவுளை நாடி எல்லோருக்கும் சிறந்த வாழ்வினை அருளும்படி
ஆரோக்கியமான, சந்தோசமான, நிம்மதியான வாழ்வை கொடுக்கும்படி
தங்கள் எல்லோருக்கும் எங்களது மனம் கனிந்த இனிய புது தமிழ் வருட வாழ்த்துக்கள்

என்றும் அன்புடன்

தங்கள் நலம் நாடும்

தங்களில் ஒன்றாக
மனம் அங்கும் வுடல் இங்குமாக


(சொல் குற்றம், பொருள் குற்றம் கண்டால் பொறுத்தருளவும்)

Wednesday, April 6, 2011

மனிதா - யார் நீ? - தொடர் -பகுதி 3

மனிதா - யார் நீ? - தொடர் -பகுதி 3
மறந்தோம் நம்மை, மாயமாய் போனது நிலை நொடிபொழுதில்...
மனம் என்ன மாயக் கண்ணாடியா?
நினைத்தவுடன் பிரதிபலிக்க!
கனம் பொறுத்தால் போரது, காத்திருந்து
கண்டால், காண்பது தெரியும் உன் கண் தான் கோளாறு
மனக் கண்ணாடி அல்ல என்று...
குழந்தையாய் கண்டது உண்மை,
நாமெல்லாம் கூடி வாழ்ந்தது மெய்மை.
வழியில் அறிந்தது கடமை
வாங்கி சேர்த்தது உடமை
வாழ்வின் முடிவில் கிடைப்பது முதுமை
அறிந்தும் அறியாமலும் செய்துகொண்டிருப்பது மடமை.
இது அத்துணையும் உண்மை..
இரண்டாம் அடி
போன வாரம் போய் வந்தோம், பொன்னுலகம் கண்டோம்,
நிலை மறந்து நின்றோம், நீள் மூச்சு தான் வருகிறது.. ம்ம் ம்ம் ...
பொய்யாய் போனது, மாயத்திரை மறைந்தது... காரணம்...
நாளைக்காக வாழும் நாம், இன்றை இழந்தோமே!
நேற்றை நினைத்து, நேரத்தை பாழாக்கி; உழ்வினை
உண்டு மீண்டும் உயிராய் உருவாகி உழன்று, மாற
மறுக்கும் மனிதனோ.. இல்லை வழி தேடி தவிக்கும்
வானரமாய் போனோமோ..
நடை பயிலும் வரை தாய் தந்தை - முதல்;
உடை மாறும் போது நீ - முதல்; வாழ்வின்
விடை கிடைத்தால் - யார் முதல்?
மனிதனை கண்டோம், வானரமாய் போனோம்,
எதை கண்டால் தெரியும் விடை..
நான் மனிதன்தானா?.. பொறுத்திருங்கள்..
விடை வரும்.....நானும் வருவேன்...

--
N. Bhaskaran
+919820807258

Wednesday, March 30, 2011

மனிதா - யார் நீ? தொடர் பகுதி 3

மனிதா - யார் நீ? தொடர் பகுதி 3
கண்டோம் வந்த கதை, காண்போம் வளர்த்த கதை
பிறந்தது பூர்வஜன்ம தொடர் பயன்; உலகில்
அறிந்தது தாய் முகம் முதலில்; தவழ்ந்து, நின்று
நிமிர்த்து நடந்த வழி தந்தை நோக்கு; பின் நீ போக
மறந்த வழி யாதோ?
போகும் வழி என்ன, அறிந்துகொண்டால் வரும்
புரிதல் தானாய்; நீ கேட்டுக்கொள் ஏது செயல்
நரன் வசம் , ஏது செயல் பிசாசம்; நேர் வழி விட்டு
ஏன் இந்த விநாசம்!
முதல் அடி:
தோன்றுமே மயக்கம்; நீக்குவோம் உந்தன் தயக்கம்; போவோம்
பயணம்; கண்மூடுங்கள்.........மனதை திறந்து உள் காணுங்கள்......
அதோ அதோ.. ஆஹா. தாய் வருகிறாள்.. கையில் பால் சோறு,....
(கண் மூடி கற்பனை செய்யுங்கள்)
நீ நடிப்பாய்.. உறங்குவது போல் உல்லாசமாய் இருப்பாய்...
(வந்து விட்டாள், கண் மூடிகொள்ளுங்கள் ம்ம் . , சீக்கிரம்.... )
அழகாய் நடிக்கும் உன் ஆற்றலை கண்டு இருமாப்பால் நின்று .
காற்றில் அசையும் உன் குழலால் தன் நிலை மறப்பாள்...
வாழ்வை அர்பணிப்பாள்.... எப்படி இருக்கிறது உன் மனநிலை...
அமைதியாய்.. மென்மையாய்.. பூப்போல்... வானத்தில் மிதக்குமே....!?
ம்... ம்... ம்.... அங்கேயே இருங்கள்...... இறங்கவேண்டாம்....
சுந்தரமான சூழலில்...
மயங்கி கிடப்போம் மனிதனாக..
நானும் போய்விட்டு,,,,,,,,,,
அடுத்த வாரம் வருகிறேன்.........
இந்த வாரம் - நான் மனிதன்..............நீங்கள்......
--
N. Bhaskaran
+919820807258
ஆஹா ஆஹா
எங்கே எங்கே என்று எதிர் நோக்கும் கால்
வந்தே விட்டான் மனிதன் மனதை மயக்க
மயங்கும் மனதை மயங்க விடாமல்
கனவுலகுக்குள் கொண்டு சென்றால்
என் செய்வேன் நான்
என் செய்வேன் நான் என் நிலையில்
தாய் தந்தை முகம் கண்டு
தனிமையில் விட்டு போகும் நிலையில் (தாயுடன் ,பிள்ளையையும்)
கனவிலும் நினைவிலும் தவிக்கும் மனதுடன்
சுபாரமேஷ்

Thursday, March 17, 2011

கவிதை பயணம்

அன்பு சகோதரி,
கவிதை கண்டு இதயம் ஒரு நிமிடம் நின்று இயங்கியது
யாரிது, எங்கே இருந்து வருகிறது இத்துணை ஆக்கம்
ஒருவரை ஒருவர் உயர்த்தும் இந்த ஊக்கம்
படித்து பொருள் கண்டுகொண்டேன் இது ஒரு ஏக்கம்,
எல்லாம் அந்த இணையில்லா அன்னை தந்தை நினைவின் தாக்கம்.
நான் தொடங்கிய கவிதை பயணம், நாமெல்லாம் ஆனது
சுந்தரமாய் ஆரம்பித்து தமிழ் சூத்திரம் தேடி போனது
அரிச்சுவடியில் அடிவைத்து, ரத்தினங்கள் உருவானது
அத்தனயும் முத்துக்கள், பவளங்கள் மற்றும் முட்வில்லா சொத்துக்கள்
குடத்திலிட்ட விளக்குகளை குன்றத்தில் ஏற்றி வைத்த சுந்தரரை போற்ற வேண்டும்
என்றும் அன்புடன்,
ரத்தினம் - ஒன்பது.

நவரத்தின கவிதை

இது என்ன கூத்து அதிரடியாக
மகிழ்ந்தோம் கவிதை பார்த்து
மந்திரி எங்கே அந்த நவரத்தின மாலை
கொண்டு வா பரிசளிபதிற்கு
இந்த நவரத்தின கவிதைக்கு
ஐயப்ப சுவாமி படி பாட்டு போல
குடும்பத்தின் தல வரலாறு

நான் பின் வாங்கிவிட்டேன் இனி கவிதை பாட
அம்மம்மா இனி தாங்காது போல
ஓடிக்கொண்டு இருக்கிறேன் காத தூரம்
சரியான குடும்பமட இந்த ஆலமரம்
மாட்டி கொண்டு விட்டேனட நானும்

ஆரம்பமே சிக்ஸர்
எங்கயோ போய் விட்டீர்கள் மேல மேல
ஆரம்பியுங்கள் ப்ளாக் ஸ்பாட் போட
தம்பிக்கு உறுதுணையாக

வளர்க்கும் பொழுது உங்கள் அம்மா
வூட்டி விட்டிருப்பர்களோ ஞான பாலை
சரளமாக வெளி வருகிறது இந்த கவி மாலை
குடும்பத்திலிருந்து சாரல் சாரலாக
நானும் சளைக்கவில்லை என சவாலாக


எங்கள் குழந்தைகளையும் மறந்து விட்டீர்
என் சக தர்மினியையும் மறந்து விட்டீரோ
இந்த கவிதை அவர்களை அடைவதற்கு
நன்றாக ரசிப்பார்களே அவர்களும்


தொடரட்டும் இந்த அருமையான தொண்டு
சிறப்பாக போட்டி போட்டுகொண்டு

மந்திரி எங்கே அடுத்த கவினர்
நாகராஜா ஐயர் குடும்பத்திலிருந்து
வர சொல்லுங்கள் கவிதையோடு

வியப்புடன்

அத்திம்பேர்
தமிழ் ஐம்பெரும் காப்பியங்களுக்கு பிறகு
கணினியில் அரங்கேறுகிறது ஒரு புதிய [பெருமாள்] அகர காவியம்
அதன் தலைவன் பரமசிவனின் கழுத்தில் மாலையாகும் பேறு பெற்ற நாக-ராஜன்
அதன் தலைவியோ பாற்கடலை கடைந்தபோது பெற்ற அமிர்தமாகிய அம்புலா
அவர்கள் பெற்றது நவ- ரத்தினங்கள்
முதல் ரத்தினம் இடதுபதம் தூக்கிஆடும் நடராஜப்பெருமான் ஆன சிற்-சபேசன்
இரண்டாம் ரத்தினம் வைகுண்டபெருமாள் ஸ்ரீமன் நாராயணனின் தர்மபத்னி பெயர் கொண்ட ராஜ-லக்ஷ்மி
மூன்றாம் ரத்தினம் சரஸ்வதி அமரும் தாமரையாம் -கமலம்
நான்காம் ரத்தினம் சிவபெருமானின் நெற்றியில் சூட்டிய சந்திரனாம் -சந்திரா
ஐந்தாம் ரத்தினம் வித்யைக்கு அதிபதியான வித்யா-லக்ஷ்மி
ஆறாம் ரத்தினம் ருதுக்களில் ஒன்றான ஹேமந்த ருதுவான -ஹேமா
ஏழாம் ரத்தினம் ஸ்ரீ கிருஷ்ணனின் தேவியரில் ஒருவரின் பெயர் கொண்ட -ராதா
எட்டாம் ரத்தினம் குழந்தைப் பருவத்திலேயே மறைந்த திரிபுர சுந்தரியாம் -லலிதா
ஒன்பதாம் ரத்தினம் ஆலிலையில் அமர்ந்த பாலக்ரிஷ்ணனான -பாஸ்கரன்
இக்காவியத்தை இனிதே ஆரம்பித்து வைத்த சுந்தர-ஈசனார்க்கு நன்றி
தொடரட்டும் அவர் பணி நாமும் அவரை பின் பற்றுவோமாக
வாழ்க தமிழ் வளர்க தமிழ்

முதல் முயற்சி

கணினியை திறந்தால் கண்முன் விரியுது ஒரு உலகம்
அங்கே தெரியுது எண்ணில்லாத விண்மீன்கள்
அவை பாற்கடலை கடைந்த நாகராஜன் அமிர்தத்தோடு சேர்ந்து
கொடுத்த மின்னும் ரத்தினங்கள்
அவை செய்வதோஅற்புதங்கள்
ஒவ்வொன்றும் செய்யும் ஜாலங்கள்
சொல்ல இல்லை வார்த்தைகள்
எங்கே எங்கே என்று தேடுது மனசு கவிதையை
சொல்ல இல்லை வார்த்தையே
அமுதசுரபியாக கொட்டட்டும் எண்ணங்களை
அவரவர் அன்புத் தாகங்களை
படித்து இன்புற்று பகிர்ந்து கொள்வோம்

நவரத்தினத்தில் ஒன்றாக ஜொலிக்க முயற்சியாக..............

Wednesday, March 16, 2011

இன்னும் ஒரு muyarchi

மனிதன் மனம்
மிருகமல்ல,தெய்வமல்ல,
ஒவொரு மனதின்
ஆத்மா.பார்க்கும் நாம் மனிதனை,மிருகமாய்,தெய்வமாய்,
உடலுக்குஆடையை அலங்காரமாய் கோபமாய்,வெறுப்பை சுயநலமாய்
இன்னும் பலவாக நினிந்து நினைந்து மருகி நிற்கிறோம்.
இனி வரும் காலத்தை வாழ்வோம் மனதின் தூய ஆத்மாவை கொண்டு.
உலகத்தை சரி செய்யவும் திருத்தி அமைக்கவும் naam என்ன செய்ய? ஒவொரு மனிதனும் தாமே தம்மைநேரக்கி சீர் செய்துகொள்ள வேணும்
கலங்காதே வாழ்வோம் வாழ்கையை வாழ்கையின்
பாதையில் வரும் நிறை குறைகளுடன்
இன்கனும்
சுபரமீஷ்
பிழையை புருதருல்க இன்னும் ஒரு muyarchi ,

மனிதா - யார் நீ? தொடர் பகுதி 1

முகப்புரை:
சின்னத்திரை, தொலை பேசி, வலை விரிவு வந்தாலும் வந்தது, மனிதமே தொலைத்து போய்விட்டது, இது நமது குடும்ப அங்கதினருக்கு நான் பகிரபோகும் வாரந்திர தொகுப்பு:
முடிந்தவரை முயற்சிக்கிறேன், உங்கள் அன்பும், அரவணைப்பும் மற்றும் நிரந்திர பகிர்வுகளும், இந்த தொகுப்பின் ஊன்றுகோல்கள்:
ஆசான் வந்தனம்:
கவிதை எழுதும் நேரமிது
கடவுள் வழி காட்டுவார் தெரியுமது
நன்றி சொல்ல வந்தேன் சுந்தரரை
நமக்கு தெரிந்ததை எழுதுவேன் வந்தவரை.
நினைவலைகள்:
விட்டேன் முன்பு பாதியை, தொடர நினைக்கிறன் மீதியை
வரும் வரை உரைப்பேன் நீதியை; மற்றபடி எல்லாமே மாயை!!!
சொல்லுக்கு முன் :
மண்ணில் பிறந்தான் மானிடன்
தண்ணீரில் பிரிந்தது மீன்
விண்ணிலே பிறந்தது விடி வெள்ளி, என்
கண்ணீரில் பிறந்தது இந்த கவிதை
மனிதன், யார் நீ:
சொல்லலாம் கதை கதையாய்;
யாருக்கு வேண்டும் துயரக்கதை.
மனிதன் நினைப்பது தன்னை மட்டுமே, அவனுக்கு
மற்றது யாவும் அஹ்றினை!
வெற்றிக்கு மட்டுமே மயங்கும் மனிதன்
சற்று யதார்த்தமாய் சிந்திக்க தயங்கும் போதும்
நடைமுறைக்கு உதவாத நாகரீகங்களும்
பகட்டும், பண்பற்ற நடவும்,
உலகமே உன் கையில் என்ற உணர்வும்,
அழியும் காலம் வரும் வரை
கண் திறக்க மறுப்பான்,
பின் கதறி அழுவான்,
பொருளெல்லாம் உனது என்பான்,
தான் சொன்னது செய்தது எல்லாம் பொய் என்பான்,
மானிடா இது பிறவிப்பயனில்லை,
உன் பிறவே பயனில்லை.
சரி யார் மனிதன்,
அவன் கடவுளா? மிருகமா?
..............இன்னும் வரும்.....................
--
N. Bhaskaran
+919820807258

Tuesday, March 15, 2011

பாஸ்கரா...
நீ என்ன பால்காரரா...
(பாம்பே)பனை மரத்திலிரருதும் பால் கரக்கிறாய்...
அவ்வளவு போதை உண் தமிழ் பாலில்...
முயல்பவை அனைத்தும் திருவினையாகட்டும்...

Saturday, March 12, 2011

சுந்தர தமிழுக்கே ஈசன் அவன்,
சொல்லுக்கும் உண்டோ நிகர், இவன்
பெண்ணுக்கே பாதி கொடுத்தனன், உடல்
சந்திரனை சூடி தலையில், நர்த்தனம்
ஆடும் கலியுக கல்யாணம் கண்ட, கந்தன்
இடையில் புலித்தோல், கழுத்தில் நாகம் ஆடும்
ராஜனின் குலம் புகுந்து கொண்ட விஜயம், ப்ரியம் & சத்யம்.
நன்றி நவிலும்

அம்புலாவின் எட்டில் ஒன்று.

Tuesday, March 8, 2011

நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 08, 2011

நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 08, 2011


இன்று மட்டும் என்ன இது மகளிர் தினம்
என்றும் கொண்டாடுவோம் தினம் தினமாக

எவ்வளவு போராட்டம் அவர்களுக்கு வாழ்கையில்
என்னன்னா எதிர்பார்ப்புகள் என நினைக்கையில்
எவ்வளவு பொறுப்புகள் என்றென்றும் பார்க்கையில்
படிப்பு, வேலை, திருமணம், பிறப்பு, வளர்ப்பு
மேலும் கொட்டிகிடப்பது நிறை, நிறையாக

அணைத்து செல்லவேண்டிய விஷயங்கள் பல பல
அன்பு வளர்ப்பாக பெற்றோருடன்
அன்பு பொறுப்பாக தம்பி, தங்கைகளுடன்
அன்பு மரியாதையாக அண்ணன், அக்காகளுடன்
அன்பு பகிர்ந்து கணவனுடன்
அன்பு செலுத்தி குழந்தைகளுடன்
அன்பு பரிமாறி சுற்றத்தாருடன்
அன்பு கொண்டு பெரியோருடன்

தாய்மை என்ற இன்ப சுகத்துடன்
அது அவர்களுகே என்ற தனி உரிமையுடன்
மற்ற என்னன்னா சுமைகள் வாழ்க்கையில்
அப்பப்பா எத்தனை தியாகங்கள் என நினைக்கையில்

குடும்பத்தில் பொறுப்புகள் 70 சதவிகிதம் மேல்
ஆனால் மகளிருக்கு ஒதுக்குவது 30 சதவிகிதமாம்
வேண்டாம் இந்த உதவா விகிதாச்சாரங்கள்
பகிர்ந்துகொள்வோம் வாழ்கையில் சரிபாதி
துணை நிற்போம் அவர்களுடன் உறுதியோடு
என்றென்றும் நிலைக்கட்டும் இந்த கோட்பாடு

இன்று நூறாவது உலக மகளிர் தினம்
அவர்களுடைய உன்னத சிறப்பு தினம்
தாள் தணிந்து போற்றுவோம் மனதார
கூடி நிற்போம் உள் மன நிறைவாக
வாழ்க வளமுடன் என்றும் எப்போதுமாக

என்றும் அன்புடன்

சுந்தரேசன்

(சொல் பிழைகள் மன்னிக்க படட்டும் )