கம்பன் வீட்டு கைத்தறியும் கவி பாடும்
அனால் நாகராஜர் வீட்டு புல்லும் கவி பாடும்
அதுவும் நீ இரு நாகரஜரின் அன்பு வாரிசு
புலிக்கு பிறந்தது பூனை ஆகுமா
அங்கு அன்னை கவிதை மழை சாரலாக
இங்கு சேய் மடை திறந்த வெள்ளம் போல
மும்பையர் யோசிக்கிறார் தான் எங்கு இருக்கிறோம் என்று
இமயமலை போல உறங்கி கொண்டிருந்த
உன் கவிதை வேட்கை இன்று பரிதி கண்ட பனி போல்
கரை புரண்டு ஓட ஆரம்பித்து விட்டது கங்கை வெள்ளமாக
தட்டி எழுப்பிவிடு உன் கவிதை நேயத்தை
பரப்பி விடு உலகெல்லாம் உவகை கொள்ள
இப்போது தான் தெரிகிறது இரண்டு ஸ்ரீயும் நவீனில்
கவிதை மன்றம் நடத்துவதர்காகவோ
தொடரட்டும் தங்கள் கவிதை பட்டி மன்றம்
இருக்கிறோம் நாங்கள் ரசிக்க ஆவலாக
என்றும் அன்புடன்
சித்தப்பா
No comments:
Post a Comment