நூறாவது உலக மகளிர் தினம் மார்ச் 08, 2011
இன்று மட்டும் என்ன இது மகளிர் தினம்
என்றும் கொண்டாடுவோம் தினம் தினமாக
எவ்வளவு போராட்டம் அவர்களுக்கு வாழ்கையில்
என்னன்னா எதிர்பார்ப்புகள் என நினைக்கையில்
எவ்வளவு பொறுப்புகள் என்றென்றும் பார்க்கையில்
படிப்பு, வேலை, திருமணம், பிறப்பு, வளர்ப்பு
மேலும் கொட்டிகிடப்பது நிறை, நிறையாக
அணைத்து செல்லவேண்டிய விஷயங்கள் பல பல
அன்பு வளர்ப்பாக பெற்றோருடன்
அன்பு பொறுப்பாக தம்பி, தங்கைகளுடன்
அன்பு மரியாதையாக அண்ணன், அக்காகளுடன்
அன்பு பகிர்ந்து கணவனுடன்
அன்பு செலுத்தி குழந்தைகளுடன்
அன்பு பரிமாறி சுற்றத்தாருடன்
அன்பு கொண்டு பெரியோருடன்
தாய்மை என்ற இன்ப சுகத்துடன்
அது அவர்களுகே என்ற தனி உரிமையுடன்
மற்ற என்னன்னா சுமைகள் வாழ்க்கையில்
அப்பப்பா எத்தனை தியாகங்கள் என நினைக்கையில்
குடும்பத்தில் பொறுப்புகள் 70 சதவிகிதம் மேல்
ஆனால் மகளிருக்கு ஒதுக்குவது 30 சதவிகிதமாம்
வேண்டாம் இந்த உதவா விகிதாச்சாரங்கள்
பகிர்ந்துகொள்வோம் வாழ்கையில் சரிபாதி
துணை நிற்போம் அவர்களுடன் உறுதியோடு
என்றென்றும் நிலைக்கட்டும் இந்த கோட்பாடு
இன்று நூறாவது உலக மகளிர் தினம்
அவர்களுடைய உன்னத சிறப்பு தினம்
தாள் தணிந்து போற்றுவோம் மனதார
கூடி நிற்போம் உள் மன நிறைவாக
வாழ்க வளமுடன் என்றும் எப்போதுமாக
என்றும் அன்புடன்
சுந்தரேசன்
(சொல் பிழைகள் மன்னிக்க படட்டும் )
No comments:
Post a Comment