Wednesday, April 20, 2011

மனிதா யார் நீ? தொடர் பகுதி-5

மனிதா யார் நீ? தொடர் பகுதி-5
மனிதன் - அவன் என்ன ஆண்டவனா?
கடவுளே மனிதனாக அவதரித்த போது
மனிதன் ஏன் ஆண்டவனாக முடியாது?
நீங்கள் சொல்லுங்கள் காஞ்சியிலே அவதரித்த மகான், காஞ்சி முனி மண்ணில் உதித்த மனிதனா அல்ல கடவுளே அனுபிவைத்த தெய்வ மகானா?
ஒன்று மட்டும் நிச்சயம், கடவுளுக்கும், மனிதனுக்கும் இடையில் காத தூரம் இல்லை,
கன தூரம்தான்...
அது சரி
அடி நான்கு
அன்பென்ற சொல்லுக்கு உடையன அனைத்துயிரும்
பண்பென்ற சொல்லுக்கு படைத்தனன் மனிதனை
என்னென்று சொல்வேன் பண்பைதேடி
பரிதவிக்கும் இம்மக்களை.
உண்டென்று உணர்தால் - அவன் உண்டு
இல்லையென்று மறுத்தாலும் - அவன் உண்டு
அன்புக்கும் - அவன் உண்டு
பண்பிற்கும் - அவன் உண்டு
ஆசானாய் - அவன் உண்டு
நண்பனாய் - அவன் உண்டு
அன்னை, தந்தையாய் - அவன் உண்டு
குழந்தயாய் - அவன் உண்டு
இயலாமைக்கு - மருந்தாய் அவன் உண்டு
இருளுக்கு - விளக்காய் அவன் உண்டு
வெயிலுக்கு - நிழலாய் அவன் உண்டு
மழைக்கு - குடையாய் அவன் உண்டு
எல்லாமுமாய் - அவன் உண்டு
எல்லாமுமாய் எம்முடன் இருக்கும் இறைவன் என்ன சொன்னார்..
நன்றாய் யோசி, நீ யாராக இருக்கிறாய்,
இது உன் உடலா? இது உன் பெயரா? நீ அறிவாளியாய் அறியபடுகிறாயா?
நீ மனிதனா? நீ மிருகமா? நீ கடவுளா?
உண்மையில் நீயே ஆத்மா.
அதுவே நீ மனிதனாக, நீயாக,
அறிவாளியாக, எல்லாம் உடையவனாக
இந்த பெயருடையவனாக அறியபடுகிறாய்.
உண்மையை அறிந்துகொள்,
அறிந்துகொண்டதும், அதை முழுமையாய், பிடித்துக்கொள், ...
மனதுக்குள் பல இச்சை கொண்டு,
வாழ்வின் அர்த்தத்தை தொலைத்துவிடாதே...
அறிவாய் நீ யாரென்று....

--
N. Bhaskaran
+919820807258

No comments:

Post a Comment