மனிதா - யார் நீ? - தொடர் -பகுதி 3
மறந்தோம் நம்மை, மாயமாய் போனது நிலை நொடிபொழுதில்...
மனம் என்ன மாயக் கண்ணாடியா?
நினைத்தவுடன் பிரதிபலிக்க!
கனம் பொறுத்தால் போரது, காத்திருந்து
கண்டால், காண்பது தெரியும் உன் கண் தான் கோளாறு
மனக் கண்ணாடி அல்ல என்று...
குழந்தையாய் கண்டது உண்மை,
நாமெல்லாம் கூடி வாழ்ந்தது மெய்மை.
வழியில் அறிந்தது கடமை
வாங்கி சேர்த்தது உடமை
வாழ்வின் முடிவில் கிடைப்பது முதுமை
அறிந்தும் அறியாமலும் செய்துகொண்டிருப்பது மடமை.
இது அத்துணையும் உண்மை..
இரண்டாம் அடி
போன வாரம் போய் வந்தோம், பொன்னுலகம் கண்டோம்,
நிலை மறந்து நின்றோம், நீள் மூச்சு தான் வருகிறது.. ம்ம் ம்ம் ...
பொய்யாய் போனது, மாயத்திரை மறைந்தது... காரணம்...
நாளைக்காக வாழும் நாம், இன்றை இழந்தோமே!
நேற்றை நினைத்து, நேரத்தை பாழாக்கி; உழ்வினை
உண்டு மீண்டும் உயிராய் உருவாகி உழன்று, மாற
மறுக்கும் மனிதனோ.. இல்லை வழி தேடி தவிக்கும்
வானரமாய் போனோமோ..
நடை பயிலும் வரை தாய் தந்தை - முதல்;
உடை மாறும் போது நீ - முதல்; வாழ்வின்
விடை கிடைத்தால் - யார் முதல்?
மனிதனை கண்டோம், வானரமாய் போனோம்,
எதை கண்டால் தெரியும் விடை..
நான் மனிதன்தானா?.. பொறுத்திருங்கள்..
விடை வரும்.....நானும் வருவேன்...
--
N. Bhaskaran
+919820807258
No comments:
Post a Comment