Wednesday, March 30, 2011

மனிதா - யார் நீ? தொடர் பகுதி 3

மனிதா - யார் நீ? தொடர் பகுதி 3
கண்டோம் வந்த கதை, காண்போம் வளர்த்த கதை
பிறந்தது பூர்வஜன்ம தொடர் பயன்; உலகில்
அறிந்தது தாய் முகம் முதலில்; தவழ்ந்து, நின்று
நிமிர்த்து நடந்த வழி தந்தை நோக்கு; பின் நீ போக
மறந்த வழி யாதோ?
போகும் வழி என்ன, அறிந்துகொண்டால் வரும்
புரிதல் தானாய்; நீ கேட்டுக்கொள் ஏது செயல்
நரன் வசம் , ஏது செயல் பிசாசம்; நேர் வழி விட்டு
ஏன் இந்த விநாசம்!
முதல் அடி:
தோன்றுமே மயக்கம்; நீக்குவோம் உந்தன் தயக்கம்; போவோம்
பயணம்; கண்மூடுங்கள்.........மனதை திறந்து உள் காணுங்கள்......
அதோ அதோ.. ஆஹா. தாய் வருகிறாள்.. கையில் பால் சோறு,....
(கண் மூடி கற்பனை செய்யுங்கள்)
நீ நடிப்பாய்.. உறங்குவது போல் உல்லாசமாய் இருப்பாய்...
(வந்து விட்டாள், கண் மூடிகொள்ளுங்கள் ம்ம் . , சீக்கிரம்.... )
அழகாய் நடிக்கும் உன் ஆற்றலை கண்டு இருமாப்பால் நின்று .
காற்றில் அசையும் உன் குழலால் தன் நிலை மறப்பாள்...
வாழ்வை அர்பணிப்பாள்.... எப்படி இருக்கிறது உன் மனநிலை...
அமைதியாய்.. மென்மையாய்.. பூப்போல்... வானத்தில் மிதக்குமே....!?
ம்... ம்... ம்.... அங்கேயே இருங்கள்...... இறங்கவேண்டாம்....
சுந்தரமான சூழலில்...
மயங்கி கிடப்போம் மனிதனாக..
நானும் போய்விட்டு,,,,,,,,,,
அடுத்த வாரம் வருகிறேன்.........
இந்த வாரம் - நான் மனிதன்..............நீங்கள்......
--
N. Bhaskaran
+919820807258

No comments:

Post a Comment