தமிழ் புத்தாண்டு பிறந்து விட்டது புது புரட்சியுடன்
புது புது நல்ல மாற்றமாக பலரின் எதிர் பார்ப்புடன்
பழைய கல கல என்ற வாழ்க்கைக்கு மாறுவர் சிலர் வுடல் நலம் கண்டு
பழையன மறந்து சிலர் புது உத்வேகம் கொள்வார் இது தான் வாழ்க்கை என புது வாழ்வை தேடி
பாசமா தாய் நாட என சிலர் அங்கும் இங்குமாக நடை போட்டுகொண்டு
ஆசிய நமது வீடு என சிலர் சுற்றி வருவார் தம் மக்களை நாடி
சிலர் புது குழந்தைதனை பேரனா அல்லது பேத்தியா
எல்லாம் சம்மதம் என கையில் ஏந்துவார் மகிழ்ச்சியுடன்
தாயும் சேயும் உடல் நலமாக கடவுளை வேண்டி
இது நமது வீடு என உணர்வுடன் சிலர் புது மனை புகுவார் மன நிறைவுடன்
வேலை போதுமென ஒய்வு பெறுவார் சிலர் தானாகவே மன நிம்மதியை தேடி
வேலை வேண்டாம் என ஒய்வு பெறுவார் சிலர் தானாகவே உடல் நலம் நாடி
ஆசிரமா அல்லது ஒய்வு விடுதியா என இடம் மாறுவார் தென்னகம் நோக்கி
வேலையில் சிறப்பு, மென் மேலும் உயர்வு என அமையும் சிலருக்கு
மண வாழ்க்கை சிலருக்கு அமையும் மன மகிழ்ச்சியுடன் கொண்டாட
வேலை நிமித்தம் சிலர் செல்வார் பல நாடுகளை கடந்து வெற்றியுடன்
பறந்து செல்வர் சிலர் மேற்படிப்பு படித்து வெற்றி வாகை சூட
புது இடம் காண்பார் கல்லூரியில் காலடி வைத்து வெற்றி பெற
கர வருடம் எல்லோருக்கும் அமையும் அவரவர் விருப்ப படி இனிதாக
இது ஜோசியம் அல்ல, மன நிறைவுடன் வெளி வரும் எங்களது வாழ்த்துக்கள்
வேண்டுகிறோம் கடவுளை நாடி எல்லோருக்கும் சிறந்த வாழ்வினை அருளும்படி
ஆரோக்கியமான, சந்தோசமான, நிம்மதியான வாழ்வை கொடுக்கும்படி
தங்கள் எல்லோருக்கும் எங்களது மனம் கனிந்த இனிய புது தமிழ் வருட வாழ்த்துக்கள்
என்றும் அன்புடன்
தங்கள் நலம் நாடும்
தங்களில் ஒன்றாக
மனம் அங்கும் வுடல் இங்குமாக
(சொல் குற்றம், பொருள் குற்றம் கண்டால் பொறுத்தருளவும்)
No comments:
Post a Comment