அன்பு சகோதரி,
கவிதை கண்டு இதயம் ஒரு நிமிடம் நின்று இயங்கியது
யாரிது, எங்கே இருந்து வருகிறது இத்துணை ஆக்கம்
ஒருவரை ஒருவர் உயர்த்தும் இந்த ஊக்கம்
படித்து பொருள் கண்டுகொண்டேன் இது ஒரு ஏக்கம்,
எல்லாம் அந்த இணையில்லா அன்னை தந்தை நினைவின் தாக்கம்.
நான் தொடங்கிய கவிதை பயணம், நாமெல்லாம் ஆனது
சுந்தரமாய் ஆரம்பித்து தமிழ் சூத்திரம் தேடி போனது
அரிச்சுவடியில் அடிவைத்து, ரத்தினங்கள் உருவானது
அத்தனயும் முத்துக்கள், பவளங்கள் மற்றும் முட்வில்லா சொத்துக்கள்
குடத்திலிட்ட விளக்குகளை குன்றத்தில் ஏற்றி வைத்த சுந்தரரை போற்ற வேண்டும்
என்றும் அன்புடன்,
No comments:
Post a Comment