Wednesday, April 13, 2011

மனிதா யார் நீ? தொடர் பகுதி-4

மனிதா யார் நீ? தொடர் பகுதி-4
கண்டோம், கேட்டோம், கற்றோம் வாழ்வின் கதை என்ன...
விழி வைத்து காத்திருந்து வீணாகவில்லை
வாழ்வின் விதை எங்கே முளைத்து வந்ததோ
என்ற விடை காணும் முயற்சி,
பழி ஒன்றும் செய்யாமல் பாவம்தனை சுமக்காமல்
மனிதனாய் வாழ மாதவம் செய்தேனோ
என் முன்னோர் வழி வகுத்த பாதையில் நான்
நடக்க முனைபேனோ....
சரி ஏது, தவறேது, தரம் பிரிக்க தந்தனரே
அறிவென்ற முதல் படி அதுதானே மனிதனுக்கு
அரிச்சுவடி...
மற்றோர் நலம் கருதி வாழ்வதென்பதே மாநிடமோ,
பற்றேதும் இல்லா மனிதன் பவனியில் உண்டோ; ஆனால்
சற்றே நிலை கொண்டால் நாமும் காந்தி மகான் தான்...
அடி மூன்று
அறிந்தோம் அடி ஒன்றில்; கற்பனை உலகில் பவனி வந்தோம், தேடி
திரிந்தோம் மூலத்தை, மனிதனில் மறுமுகம் கண்டோம் அடி இரண்டில்.
அடி மூன்றில் உள்நோக்குவோம் உண்மையில் உள்ளது என்ன?
உறவுகள் வந்தது ஏன்?
இறைவன் கொடுத்தது உடன் பிறப்பு
முயன்று கிடைத்தது உயிர் நட்பு
இதயம் இணைத்தது இல்லற பிணைப்பு; வாழ்வின்
அர்த்தங்கள் வசந்தமாய் வந்தது நம் வளர்ப்பு..
இவை யாவும் மனிதனிக்கே உடைத்தது
அவை அமைவது அப்பருவதினில் கிடைப்பது
வாழ்கையின் அர்த்தங்கள்; காலத்தின் நிகழ்வுகள்; வாழத்தெரிந்திருந்தால்
அத்துணையும் வளங்கள்..
நினைத்துப்பாருங்கள்,
வளர்ப்பு சரியாய் தானே இருந்தது,
மனம் மலராய் தானே மணந்தது,
உறவுகள் உயர்வாய் தானே திகழ்ந்தது,
கல்வி, கலைகள் கற்றுதானே நாம் உயர்ந்தது,
பின் ஏதோ நீ மறந்தது?
ம்ம்..... ம்ம்..... இதுவரை எல்லாம் சரிதான்,
எங்கே தொலைந்தது மனிதா.. நேயம்..
மனிதனுக்கான அடையாளம்...
நான் தேடுகிறேன், நீங்க......................
தேடிக்கொண்டே இருங்க, வரேன்...................

No comments:

Post a Comment