மனிதா யார் நீ? தொடர் பகுதி-6
சென்ற வாரம், சொன்னதை நினைத்துப்பாருங்கள். அவன் எங்கும் நிறைந்தவன் என்றோம்...
ஆனால் இன்று,
இடி போன்று இறங்கியது
நம் இதயம் வாழ் சாயியின் துயில்.
துடித்துப்போனது நெஞ்சம், இனி
துயர் துடைக்கப்போவோம் எங்கே,
படித்துச்சொன்னது மனம், இறைவன்
பரம்பொருள், ஜ்யோதி ஸ்வரூபன்;
எங்கும் நிறைந்தவன்!
எல்லாமுமாய் எம்முடன் இருப்பான் சாயிநாதன்!
பதினான்கில் பாபா பரந்தாமன்,
இன்று, எங்கெங்கிலும் நிறைத்த பராபரன்....... ..
அடி ஐந்து.
சரீரம் எடுத்தது சாதனைக்கே
மனம் அடக்க இரு வழி உண்டு,பலர் அறிய செய்யும் செயல்கள்;பகிரங்கம் - அது யாகம், பூஜை, விழாக்கள், பண்டிகைகள் கொண்டாடங்கள்..
தான் அறிய மட்டும் செயல்கள்;
அந்தரங்கம் - தியானம், உதவிகள், த்யாகங்கள்.
பகிரங்க செயல்களுக்கு தேவை - பொருள், பகட்டு, ஆடம்பரம்
அந்தரங்க செயல்களுக்கு தேவை - அகிம்சை, சத்தியம்,தூய்மை, புலனடக்கம், திருடாமை.
இவை சாமான்ய தர்மங்கள்,
உன்னை நீ புரிந்து கொள், ஒழுக்கம் கொண்டோனை உலகம்
இருந்தாலும் மதிக்கும்,
இறந்தாலும் மதிக்கும்.
மனிதனாய் வாழ அறிந்தால்,
சரிரம் எடுத்தது சாதனையாகும்...
இனி நீங்கள் செய்யும் செயல்கள்,
பகிரங்கமா? அந்தரங்கமா?
ம் ம் .. சத்தமாய் சொல்லுங்கள், கேட்கவில்லை..
No comments:
Post a Comment